விடுதலைப் புலி பிறையாளனுக்கு உதவ முன்வருக!
நாட்டினருக்காகத் தன்னை ஒப்படைத்த விடுதலைப் புலி பிறையாளனுக்கு உதவ முன்வருக! சன்னங்களையும், தகடுகளையும் தன் உடலில் தாங்கி வேதனையில் வாடும் முன்னாள் போராளி பிறையாளனின் வாழ்வு செழிக்குமா? தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை களமுனைப் போராளியாகப் பல களம் கண்டவர்தான் பிறையாளன் என்றழைக்கப்படும் நல்லையா இயேசுதாசன். இலங்கைப்படையினரின் அடக்குமுறைகளுக்கும், தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்வை ஒப்படைத்தவர்களில் பிறையாளனும் ஒருவர். தமது வாழ்க்கையை ஈகம் செய்து, உணர்வுகளையும்,…