தோழர் தியாகு எழுதுகிறார் : பிற்போக்கும் பாசிசமும் ஒன்றா?
(தோழர் தியாகு எழுதுகிறார் : வலியறிதல் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! ”பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்” என்ற தலைப்பில் செந்தழல் வலைப்பக்கத்தில் அன்பர் குமணன் எழுதியிருப்பதை தாழி மடல் 452இல் பகிர்ந்திருந்தேன். அதற்கான என் மறுமொழி:–::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: பிற்போக்கும் பாசிசமும் ஒன்றா? உருநிலைச் சிக்கல்களுக்கு உருநிலைத் தீர்வுகள் (concrete solutions for concrete issues) என்பதுதான் என் அணுகுமுறை. இங்கே சிக்கல்: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் செய்ய வேண்டியது என்ன? இதற்கு நான் முன்வைக்கும் உரு…