தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா? ஒருவர் நலனுக்காக மற்றவர் குரல்கொடுக்கக்கூடாது என்பதும் ஓர் இனத்தவரின் நலனுக்காகப் பிற இனத்தவர் குரல் கொடுக்கக்கூடாது என்பதும் அறியாமையல்லவா? இனப்பற்றை ஆரவாரச் செயலாகக் கருதுபவர்கள் அப்படித்தான் அறியாமை மிகுந்தவர்களாக இருக்கின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்! அண்மையில் எழுவர் பேரணிக்காக, வேலூரில் இருந்து சென்னை வரை ஊர்திப்பேரணி நடப்பதாக இருந்ததை அனைவரும் அறிவர்! அந்தப் பேரணிக்குப் பலதரப்பட்டாரும் ஆதரவு தெரிவித்தனர். அதுபோல் நடிகர் விசய்சேதுபதியும் 25 ஆண்டுகளாக அறமுறையின்றி அடைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கொடுமையாகக் கூறித் தானும்…