திருக்குறளில் உருவகம் 2 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி
(16.03.14 இதழின் தொடர்ச்சி) ஓரறிவின்: ஓரறிவுள்ள உயிரினத்தை – சிறப்பாக மரத்தை, பயனுள்ளது, பயனற்றது என இரு வகையாகக் காண்கிறார் கவிஞர். உலகில் வாழும் மக்களும் அதற்கேற்ப இருவகையாகத் தோற்றமளிக்கின்றனர். இதுவன்றிப் பொதுவாக ஆரறிவு படைத்த மனிதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மரம் தாழ்ந்ததே. ஆதலால் மனித குண நலன்களில் குன்றிய யாவரும் பெரும்பாலும் மரமாகக் காட்சியளிக்கின்றனர். அன்பு இல்லாதோர் பாலை நிலத்துப் பட்ட மரமாகின்றனர். இங்கு குளிர்ந்த நீரும் நிழலும் அன்பிற்கும், இவை இரண்டும் அறவே தோன்றாத பாலை நிலம்…