[புதுச்சேரியில் நடைபெற்ற உத்தமத்தின்13 ஆவது தமிழ் இணையமாநாட்டில் இடம் பெற்ற கட்டுரைகள் சில அடுத்த இதழில் வெளிவரும். இப்பொழுது இவ்விதழில் பிழையில்லாப் பிழைதிருத்திகள் தேவை என்னும் என் கட்டுரை இடம் பெறுகிறது. தனியாக வெளியிடுவதன் காரணம், இக்கட்டுரை கருத்தரங்க வாசிப்பிற்குத் தெரிவு செய்யப்படவில்லை என்பதால், கருத்தரங்கக் கட்டுரை வரிசையில் இடம் பெறுவது முறையல்ல என்பதே! மாண்புமிகு மதிப்பீட்டாளர்கள், 10க்கு 5 மதிப்பெண்ணிற்குக் குறைவாக வழங்கியதால் கட்டுரை இடம் பெறவில்லையாம்! நீங்களே சொல்லுங்கள்! இத்தகைய கட்டுரை வல்லுநர்களுக்கு வழிகாட்டியாகத் தேவையா இல்லையா என்று! எனினும் இக்கட்டுரை…