தமிழில்லா அறமன்றம் யாருக்காக? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழில்லா அறமன்றம் யாருக்காக? நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படலாமா? தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான நீதிமன்றங்களின் செயல்பாடுகள் தமிழில் அமைவதுதானே உண்மையான அறமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர், எதிர்த்தரப்பார், இரு தரப்பினரின் சான்றுரைஞர்கள் எனனத் தொடர்புடையவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பிற செய்திகளைப்பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள அவர்களுக்குப் புரியும்படித் தமிழில் அமைவதுதானே முறையாகும். ஆனால், இதற்கு மாறான நிலை நம்நாட்டில் நிலவுகின்றதே! தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என இந்திய அரசியல்யாப்பின்படிதான் நாம் வேண்டுகிறோம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 348(2) இன்படி, …