ஆரியக் கலாம் – முகிலன்
ஆரியக் கலாம் (குறிப்பு: இறந்தவரை பற்றித் தூற்றும் எண்ணம் கொண்டு நான் இந்தக் கட்டுரையை வடிக்கவில்லை. கலாம் போல் இன்னும் பல அடிமைகள் உள்ளனர். அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில்தான் என் பணி செய்கிறேன்) “பிறர்க்கென வாழ்ந்து மடிவது மலையை விடக் கடினமானது, தனக்கென வாழ்ந்து மடிவது இறகை விட எளிதானது”. என்பார் மாபெரும் மக்கள் தலைவர் தோழர்.மாசேதுங்கு. கடந்த ஆடி 11, 2046 /27-07-2015இல் இந்திய ஒன்றியத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இறந்து விட்டார். அதையொட்டி இந்திய…
உணர்த்துவோம் பகைக்கு! – பரணிப்பாவலன்
எந்நாளோ? உனக்காய்ப் பேசா உயிரிலா இந்தியம் உடைந்து வீழ்ந்திடும் உயிர்நாள் என்றோ தனக்காய் உலவிடும் தடியர் கும்பல் தலையிலா கிடந்திடும் திருநாள் எதுவோ சினத்துடன் இம்மண் சீறியே கிளர்ந்து சிறைகளை உடைக்கும் சீர்நாள் அதுவே எனக்கு விடுதலை என்பேன் முதுபெரும் எம்மினம் மகிழ்ந்திடும் இன்பநாள் உரைப்பேன் கணக்கிலா சாவுகள் களத்தில் கண்டும் கயவரின் பிடியில் காண்பதா நாடு மணக்கும் தாய்மண் மரிக்கும் நிலையில் மடையர் கைக்குள் மாயினம் இருப்பதா? பணம்தான் பெரிதெனப் பிணமாய் வாழ்ந்திடும் பண்பிலா விலங்கே பறைவாய் இங்கே வணங்கும் தமிழ்நிலம் வடவர்…
மெய் – முகிலை இராசபாண்டியன்
வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் முத்தம்மா. நாலு வீட்டுக்குத் துணி துவைத்துப் பிழைக்கும் பிழைப்பும் போய் விடுமோ என்று அவளுக்குக் கவலையாக இருந்தது. பத்து மணிக்கு வழக்கறிஞர் வீட்டுக்குத் துணி துவைக்கப் போயிருந்தாள். அதன் பிறகு பயிற்றுநர் வீடு, வைப்பக அலுவலர் வீடு என்று பல வீடுகளுக்கும் துணி துவைத்துவிட்டு ஒரு மணிக்குத்தான் திரும்பினாள். மற்றவர்கள் வீட்டுத் துணியைத் துவைத்தது எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை. வழக்கறிஞர் வீட்டுத் துணியைத் துவைத்தது மட்டும்தான் நினைவு வந்தது. வழக்கறிஞர்…
பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் – புகழ்ச்செல்வி
பகைக்கு எரிமலை! பைந்தமிழுக்குப் பனிமலை! பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் மொழி என்பது ஆறறிவு கொண்ட மாந்தனுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய ஆற்றலாகும். கொப்பூழ்க் கொடி அறுத்த நாள்முதல் காலில்லா தொட்டிலில் படுக்கும்வரையில் மாந்தனுக்கு மாந்தன் உறவாடிக் கொள்ளத் தேவையான முதன்மையான வழி மொழியாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியை – அதன் வாழ்வை – சிறப்பை – பெருமையை, மேலும் அதை எவ்வாறு வளர்ப்பது என்று ஒவ்வொரு மொழி இனத்தாரும் எண்ணிச் செயல்படுகின்ற வேளையில் உலக மொழிக்கெல்லாம் மூத்ததாய் இளமை மாறாததாய்…
புகழ்ச்செல்வி 100ஆவது இதழ் வெளியீட்டு விழா
சித்திரை 22, 2046 / மே05, 2015 பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தொப்புள்கொடி உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்தும். நமது புகழ்ச்செல்வி இதழின் 100 ஆவது வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சித்திரை 22, 2046 – 5.5.2015 இல் நடக்க இருக்கின்றது. அந்நிகழ்வுக்கு உங்களை நேரில் பார்த்து அழைக்க விருப்பம் இருந்தாலும் காலமும் பொருள்நிலை சூழலும் இடம் கொடுக்க வில்லை ஆகையால் உங்கள் அகத்திற்கே வந்து தருவதாய் எண்ணி வருகை தாருங்கள் நம் இதழ் விழா என்றே இப்படிக்கு உங்கள் உறவான — பரணிப்பாவலன்