அரசியல்வாதிகளே! நற்செயல் விதையுங்கள்! புகழை அறுவடை செய்யுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அரசியல்வாதிகளே! நற்செயல் விதையுங்கள்! புகழை அறுவடை செய்யுங்கள்! அரசியல்வாதிகள் மக்கள் பணிக்காக அரசியலில் ஈடுபடுவதாகக் கூறுகின்றனர். ஆனால் மக்கள் நலனுக்காக வருவதாகக் கூறுபவர்கள் தங்களையும் தங்கள் சார்ந்தவர்கள் நலன்களையுமே கவனத்தில் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அரசியல் என்பது வணிமாக்கப்பட்டதால், சிறு முதல் போட்டு, பெரு முதல் எடுப்பதுபோல், தேர்தல் நேரங்களில் மக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வெற்றியை ஈட்டுகின்றனர். வெற்றி பெற்றதும் மக்கள் நலனில் கருத்து செலுத்தாமல் போட்ட முதல்தொகையை எடுப்பதில் கவனம் செலுத்தி ஊழலில் ஈடுபடுகின்றனர். அன்னக்காவடியாக இருந்தவர்களும் மன்னனைப்போல் செல்வம்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 024. புகழ்
(அதிகாரம் 023. ஈகை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 024. புகழ் அழியும் உலகில், அறம்செய்து, அழியாப் புகழைப் பெறுதல். ஈதல், இசைபட வாழ்தல், அதுஅல்லது, ஊதியம் இல்லை உயிர்க்கு. கொடுத்தலும், கொடுத்தலால் வரும் புகழுமே, உயிர்வாழ்வின் பயன்கள். உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்(கு)ஒன்(று), ஈவார்மேல் நிற்கும் புகழ். புகழ்வார் புகழ்ச்சொற்கள் எல்லாம், கொடுப்பார்மேல், வந்து நிற்கும். ஒன்றா உலகத்(து), உயர்ந்த புகழ்அல்லால்,…