(திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 111. புணர்ச்சி மகிழ்தல் தலைவன் மணந்து, கூடிமகிழ்ந்த இன்பத்தை, எடுத்துக் கூறுதல்.    (01-10 தலைவன் சொல்லியவை) கண்டு,கேட்(டு), உண்(டு),உயிர்த்(து), உற்(று)அறியும் ஐம்புலனும்,       ஒண்தொடி கண்ணே உள.       கண்டு,கேட்டு, உண்டு,முகர்ந்து,      தொடுஇன்பம் இவளிடமே உண்டு. பிணிக்கு மருந்து பிறமன்; அணிஇழை       தன்நோய்க்குத், தானே மருந்து.       நோய்க்கு மருந்து வேறு;…