இலக்குவனார்க்கு வழங்கப்பெற்ற பட்டங்களும் அடைமொழிகளும்
இலக்குவனார்க்கு வழங்கப்பெற்ற பட்டங்களும் அடைமொழிகளும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்க்கு நகர்தோறும் தமிழ் அமைப்புகள் பட்டங்கள் வழங்கியுள்ளன. சிறப்பு அடைமொழி குறித்தும் இலக்குவனாரை அழைத்துள்ளனர். நூற்றுக்கணக்கில் உள்ள இவற்றுள் சிலவற்றைக் காண்போம்! இவையே பேராசிரியரின் அரும் பணிகளையும் ஆழ்ந்த புலமையையும் தமிழ் காக்கும் போர்க் குணத்தையும் மக்களால் போற்றப்பட்ட சிறப்பையும் நமக்கு உணர்த்தும். அளப்பரிய தொண்டாற்றிய பெருமகனார் ஆற்றல் களஞ்சியம் இதழியல் செம்மல் இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி இந்தி எதிர்ப்புப் போருக்கு மூலவர் இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் இருபதாம்…