புதிய அரசிற்கு வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய அரசிற்கு வாழ்த்துகள்! மாண்புமிகு பன்னீர்செல்வத்தை முதல்வராகக்கொண்டு கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06, 2016 அன்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளதற்கு ‘அகரமுதல’ இதழ் வாழ்த்துகிறது. இதற்கு முன்னர் இரு முறை [புரட்டாசி 05, 2032 – மாசி 17, 2033 (செட்டம்பர் 21, 2001 / மார்ச்சு 1, 2002); புரட்டாசி 11, 2045 – வைகாசி 08, 2046 (செட்டம்பர் 2 , 2014 – மே 22, 2015)] முதல்வராகப் பதவிப்பொறுப்பேற்றார். எனினும் நடைமுறையில் இரண்டாமவராகத்தான்…