மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடையூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றிகூறிப் பாராட்டுகிறார். மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும மும்மதி…
தனிமங்கள்(Chemical Elements) – இலக்குவனார் திருவள்ளுவன்
பெட்டகம் தனிமங்கள்(Chemical Elements) அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(நடநஅநவே) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா. தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும். இயல்பான நிலையில் தனிமங்கள் திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா. …