புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்
புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் இந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது. ‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள். இந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் அமைக்கப்பட்டு 15-12-2018-இல் தனது அறிக்கையை நிறைவு செய்தது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப…
எப்படி வளரும் தமிழ்? 2/3 : கவிஞர் முடியரசன்
(எப்படி வளரும் தமிழ்? 1/3 தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்? 2/3 கல்வித் துறையில் இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளிமுதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம்…
புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் – கனிமொழி
சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் – நெல்லையில் கனிமொழி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்துச் சமத்துவக் கல்விக்கான கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பின்வருமாறு பேசினா் : சிறுபான்மை-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டா என்று ஆர்.எசு.எசு. அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது. கல்வியில் மாநில அரசின் உரிமையில்…
புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை
புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை புதிய கல்விக் கொள்கை என்ற மத யானையைத் தமிழகத்தில் நுழையவிடக் கூடாது எனத் தமிழக அரசுக்குத் திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய அறிக்கையில் இது குறித்துப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: ”மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எசு.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய…