‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது

(புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக்கவி’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காப்பியத்தை 1937ஆம் ஆண்டில் இயற்றினார். ‘பில்கணியம்’ என்னும் வடமொழி நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது என அவரே குறிப்பிட்டுள்ளார்.           கி.பி. 10ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவர் ‘சீவகசிந்தாமணி காப்பியத்தைப் படைத்துத் தழுவல் இலக்கியம் என்ற புதிய போக்கைத் தமிழ் இலக்கியத்தில் தொடக்கி வைத்தார். பிறமொழிக் காப்பியங்களைத் தமிழ் இலக்கிய – இலக்கண மரபுகளுக்கேற்ப வடிவமைக்க வழிகாட்டினார்.          …

புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை: தங்கத்தில் பதித்த முத்து

புதிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி குறுங்காவியத் தழுவல் அணிந்துரை இனவுணர்வுக்கும், மொழியுணர்வுக்கும், தமிழ்ப் பண்பாட்டு உணர்வுக்கும் குடியாட்சியுணர்வுக்கும் மொத்தத் தொகுப்பாக முகிழ்த்த காவியம் பாவேந்தரின் புரட்சிக் கவி’.           அந்தப் புதுவைப் பாட்டுக்கு புதுமை சேர்க்கப் புறப்பட்ட காப்பியம் புலவர் பன்னீர் செல்வத்தின்  புரட்சிக்கவி நாடகக் காப்பியம்’. நகலுக்கு நகைகளைப் பூட்டி அசலுக்கே அழகு சேர்க்கிறார் பன்னீர்.  பக்கந்தோறும்  பன்னீர் தெளித்து நூலுக்கு மணம் தருகிறார். முன்னர் மொழி பொன்னே என்ற கோட்பாட்டில் பாவேந்தரின் வரிகளை அப்படியே கையாள்கிறார். மூலத்திற்கு மூலமே நிகர்…