‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண்
‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண் உங்கள் படைப்புகள் வந்துசேர வேண்டிய நாள் மாசி 29, 2048 / 13.03.2017 புதிதாய்க் குதித்தவளா புதுமைப் பெண் அத்துனைப் பெண்ணின் ஆழ்மனதிலும் அங்கம் கொண்டதே புதுமை -அறிவாய் கல்வியில் ஓங்கவும் கவலைகள் நீங்கவும் கவிதையாய் வாழவும், காட்டாறாய் மாறவும் அவள் கைதேர்ந்த பதுமை- புரிவாய் எத்திசை நோக்கியும் எடுத்தடி வைப்பாள் முக்திக்கு மூர்க்கமாய் முனிவரைத் தேடாள் சக்தியாய் உலகாளும் பெண்ணினை அறிவாய் தெளிந்தே கற்பாள் தலை நிமிர்ந்தே நடப்பாள் தயை கொள்வாள்…