புதுவைக் கவிதை வானில் கவிமன்றம் சார்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு அவரின் சமூக, இலக்கிய பணிகளைப் பாராட்டிச், சமூக இலக்கியச் சுடர் விருது வழங்கப் பட்டது.        விருதினை புதுச்சேரி காவல்துறையின் முதுநிலை கண்காணிப்பாளர் முனைவர் சந்திரன் வழங்கினார்கள். உடன் கவிதைவானில் கவிமன்ற நிறுவனர் திருமதி கலாவிசு, புலவர் இரெ.சண்முவடிவேல், கவிஞர் பைரவி தொழிலதிபர் கணேசன் ஆகியோர் உள்ளனர்