இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? – தமிழ்நெஞ்சன்
இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? காலில் முள் குத்தினால் கைபோகும் எடுக்க கண்களில் கண்ணீர் வரும் வலி உணர்த்தும் மூளை இது உடலியக்கம் உயிரியக்கம் ஆனால் இந்தியா ஒரே நாடு என்றே கூப்பாடு இருந்தும் ஏன்வரவில்லை காவிரி? பாலாறு? முல்லை பெரியாறு? இந்தியா நாடல்ல துணைக்கண்டம் தமிழகம் மாநிலமல்ல தனிநாடு ஒரேநாடென்றால் கருநாடகாவில் இருந்து தமிழன் ஏதிலியாய் தமிழ்நாட்டிற்கு வருவதேன்? ஆங்கிலேயன் வருவதற்கு முன் இந்தியா இல்லை 56 தேசமாக இருந்தது இந்து ×தமிழன் இந்தி ×தமிழ்மொழி இந்தியா × தமிழ்நாடு…
இறப்பின்றி வாழலாம் வா! – புதுவைத் தமிழ்நெஞ்சன்
இறப்பின்றி வாழலாம் வா! பட்டுப்போன பனை மரமும் கிளிகளுக்கும் ஆந்தை மரங்கொத்திக்கும் வாழப் பொந்தாகிறது ஏ….மாந்தனே! உயிர்விட்டுப் போனபின் மண்ணோடு மண்ணாகிறாய் இல்லெனில் நெருப்பில் சாம்பலாகிறாய் நீ நினைத்தால் கண்ணற்றவர்களுக்குக் கண்ணாகலாம் மீண்டும் இவ்வுலகை நீ பார்க்கலாம் இருக்கும் போது குருதிக் கொடை இறந்த பின்னர் உறுப்புக் கொடை வள்ளல் ஆகலாம் வா! புதுவைத் தமிழ்நெஞ்சன்
என்று தமிழ்..? – புதுவைத் தமிழ்நெஞ்சன்
இந்தியினை எதிர்க்கின்றோம் அறுபதாண்டாய் என்கின்றீர் ஏற்றமென்ன தமிழுக்குச் செய்துவிட்டீர்? வந்த இந்தி ஆங்கிலத்தால் சொந்தத் தமிழ் தானழியும் வடுநீக்க வழியென்ன கண்டு விட்டீர்? எந்த மொழி வளமளிக்கும் என்றெண்ணிப் படிக்கின்றீர் எம்தமிழை அதனாலே அழித்து விட்டீர் செந்தமிழைக் காப்பதற்குப் பிறமொழிகள் பிணிநீக்கிச் செந்தமிழில் கல்வியினைக் கற்கவேண்டும் எதிர்க்கின்றோம் இந்தியினை என்றுசொன்னால் இந்நாள்மட்டும் எம்தமிழை மீட்பதற்கு என்ன செய்தீர்? எதிர்ப்பதொன்றே கொள்கையாக எண்ணாமல் இன்பத் தமிழ் எம்நாட்டில் விளைவதற்கு வழியும் செய்வீர்! கதிரொளியால் மறைந்தோடும் காலைப்பனி போலயிங்குக் கனித்தமிழில் கற்றாலே கசப்பு மாறும் கதிர்மணியை நிலமேற்கும்…
செந்தோழர் நல்லகண்ணு வாழ்க! – புதுவைத் தமிழ்நெஞ்சன்
தோழர் நல்லகண்ணு(மார்கழி 12, 1956 / திசம்பர் 26, 1925) செந்தோழர் நல்லகண்ணு நீடுவாழ்க! செங்கொடித் தோழர் நல்ல கண்ணு சிந்தனை ஆற்றல் உள்ளவராம் – அவர் செங்களம் ஆடிடச் சிறிதும் தயங்கார் செழுமை நெஞ்ச நல்லவராம். உழைக்கும் மக்கள் உள்ளம் எல்லாம் உணர்வில் கலந்த உழைப்பாளி – அவர் அழைத்தால் எதற்கும் அணிய மாவார் அவரே ஏழைப் பங்காளி. அரசியல் என்பதை ஆக்க முள்ள அறிவு வழிக்குச் சென்றவராம் – போர் முரசம் போல மூச்சும் பேச்சும் முயன்றே இங்கே அடிப்பவராம். நெடிய…
தமிழா படி! தமிழில் படி! – புதுவைத் தமிழ்நெஞ்சன்
தமிழா படி! தமிழில் படி! படி… படி முயன்று படி முன்றேனப் படி! முப்பால் படி! படி… படி ஆழ்ந்து படி! ஆய்ந்து படி! அறம் படி! படி… படி பொதுமை படி! புரட்சி படி! பொருள் படி! படி… படி இனிது படி! இயற்கை படி! அகம் படி! படி… படி புரிந்து படி! புரியப் படி! புறம் படி! படி… படி நன்றாய்ப் படி! நயமாய்ப் படி! நாலடி படி!. படி… படி நிறையப் படி! நிறைவாய்ப் படி! நீளப் படி!…