குறள் மாநாடு – வடபுல நாட்டிய நிகழ்ச்சி
புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. முதல் நாள் நிறைவாகப் புது தில்லியில் உள்ள நாட்டியக் குழு ஒன்றின் நாட்டிய நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.
மூன்றாவது திருக்குறள் மாநாடு – முதல் நாள் அமர்வுகள்
புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 நாள்களில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் அமர்வு – ஒளிப்படங்கள் படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.
தில்லியில் தமிழகச் சிறுமியர் குரலில் குறள்
புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாகத் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு சங்கரராமன் சேலம், கிருட்டிணகிரி, தருமபுரி முதலான வெவ்வேறு மாவட்டச் சிறுமியர் முப்பத்தறுவருக்குப் பயிற்சி அளித்து அழைத்து வந்திருந்தார். ஓரிடத்தில் பயிற்சி பெற்றாலே ஒன்றுபோல் பாடுவது அரிதான ஒன்றாகும். ஆனால், கணிணி மூலம் பயிற்சி அளித்தும் அனைவரும் ஒன்றுபோல் சிறப்பாகத் திருக்குறள் இசை நிகழ்ச்சியை அளித்தனர். திருக்குறள்…
மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி
புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்: இயக்குநர், ஆசியவியல் நிறுவனம் [ Dr.G.John Samuel,Founder Director and SecretaryINSTITUTE OF ASIAN STUDIES] சோழிங்கநல்லூர் (அஞ்சல்), செம்மஞ்சேரி, சென்னை – 600 119 மின்னஞ்சல்: info@instituteofasianstudies.com தொலைபேசி: 24500831, 24501851 , பேசி: 9840526834 இணையத்தளம்: www.instituteofasianstudies.com பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் தலைவர், பன்னாட்டுத் திருக்குறள் நிறுவம், மொரிசியசு முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப. தலைவர், பன்னாட்டு அமைதிக்கான திருக்குறள் நிறுவம் சென்னை
ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன்
ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அழகாக முகம் காட்டவே ஆடிக்கொண்டு வருகிறாய் உன் வருகையினாலே உவகை மிகக்கொண்டு அப்பாவி மக்கள் வாய்பார்த்து நிற்க அசராது பேசி மகிழ்வார் ஆயிரம் ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசி அசத்திடுவார் ஈவுஇரக்கம் எள்ளளவுமின்றி ஏய்த்துப் பிழைப்பார் எத்தியே மகிழ்ந்திடுவார் ஏதுமறியா ஏழைகளை ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் அயோக்கிய சிகாமணிகள்! – ஏகாந்தன், புது தில்லி கவிதைமணி, தினமணி 17.11.2015