தலைவன் தேரின் ஒலி வருகையே புத்தாண்டு வருகை – உருத்திரா இ பரமசிவன்
தலைவன் தேரின் ஒலி வருகையே புத்தாண்டு வருகை கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் தூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி வேங்கை படுத்த வேங்கை வெரூஉய் பெயரும் காட்சியும் மலியும். அற்றை வானின் அகல்வாய் திங்கள் ஒளியுமிழ் காலை வருவாய் என்ன விழிஅவிழ் குவளை விரியாநின்று நோதல் யான் உற்றது அறிவையோ வாடிய காந்தள் அன்ன ஊழியும் கொடுவிரல் நுடங்கி வீழ்ந்ததும் அறிவையோ. வளி அவி அடவி…
வருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்!
வருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்! வரும் தை முதல் நாள் திருவள்ளுவர் 2046 ஆம் ஆண்டுப்பிறப்பு வருகிறது. அதற்கு முன்னால் மார்கழி 17 அன்று 2015ஆம் ஆண்டு பிறக்கிறது. ஒவ்வோர் ஆண்டையும் நாம் நம்பிக்கையோடுதான் எதிர்பார்க்கி்றோம்! ஆனால், எண்ணிய யாவும் எய்துவதில்லை. இருப்பினும் வரும் ஆண்டு தமிழர் உரிமை எய்தும் ஆண்டாக அமையும் என எதிர்பார்ப்போம்! வெறும் எதிர்பார்ப்பு பயனைத் தராது அல்லவா? எனவே, தமிழர்களின் தேசிய மொழி தமிழே என்பதையும் தமிழர்களின் இனமும் தமிழே என்பதையும் தமிழுக்குத் தலைமையும்…
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக்கொண்டாட வேண்டும்
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து 10.01.14 அன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 23-1-2008- இல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை காங்கிரசு சார்பில் இ.எசு.எசு.இராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு….
புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும்
திருவள்ளுவர் ஆண்டு 2045, நடைமுறை ஆண்டு 2014 ஆகியன பிறக்க உள்ளன. அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும் வரும்ஆண்டு துணை நிற்க வாழ்த்துகள். தமிழ் ஈழம் தனியரசாகித் திறமையும் வலிமையும் மிக்க ஈழத்தமிழர்கள், துயரம் மறந்து மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வாழ்த்துகள்! நாள் குறிக்கப் பெறும் அனைத்து இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டுகின்றேன். அரசாணைகள், தமிழ் இலக்கிய இதழ்கள் தவிர, வேறு இடங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ்த்துறைகளில் இருப்பவர்களின் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பார்க்க…