வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில! – இலக்குவனார் திருவள்ளுவன்
வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில! இப்போதைய – தி.பி.2047 / கி.பி. 2016 ஆம் ஆண்டுச் – சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் முதல்வர் புரட்சித்தலைவி செயலலிதாவிற்கு வாழ்த்துகள்! ‘பள்ளிக்கணக்கு புள்ளிக்கு உதவாது’ என்பர். அதுபோல் புள்ளிவிவரங்களை அடுக்கி, உண்மையான வெற்றியல்ல இது எனச் சில தரப்பால் கூறப்பட்டாலும் நம் அரசியலமைப்பின்படி இதுதான் வெற்றி. ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும் மக்களாட்சியில் இதுதான் வெற்றி. மொத்தத்தில் மிகுதியான வாக்குகள் பெற்றுச் சில இடங்களில் வெற்றி பெற்ற கட்சியைவிட…
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! – இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! பொதுவாக நாம் ஒருவரை எப்பொழுது நேரில் சென்று ஆறுதல் சொல்வோம்? அவர் தோல்வியைச் சந்தித்தால், அவர் வருத்தத்தில் இருந்தால், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் நேர்ச்சியில்(விபத்தில்) சிக்கியிருந்தால், தொழிலில் எதிர்பாராச் சரிவைக் கண்டிருந்தால், இத்தகைய துன்பத்துயரத்தில் மூழ்கியிருந்தால், அவருக்கு ஆறுதல் தரவும் நம்பிக்கை தரவும், உங்கள் பக்கம் இருக்கிறோம், கவலற்க எனச் சொல்வதற்காக நேரில் சென்று தேறுதல் சொல்வதுதானே வழக்கம். ஒருவருக்கு ஒருவர் மற்றொருவருக்குப் பணஉதவி போன்ற ஏதேனும் உதவி செய்தால், உதவி பெறுபவர்தானே உதவி வழங்குநரை…
திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504) எனத் தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார். எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா? …
இடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்
எதற்குக் குறுக்கு வழிகள்? அறவழி அரசியலுக்கு வழி வகுக்க வேண்டும்! இடைத்தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று என்பது ஒரு சாரார் எண்ணம். எந்தக் கட்சியின் உறுப்பினர் வெற்றி பெற்றிருந்தாரோ அக்கட்சியே அடுத்த உறுப்பினரை அறிவிக்கலாம் என்பர். ஆனால், கட்சிச்சார்பின்றித் தனித்து நின்று வெற்றிபெற்றவர் தொகுதி என்றால் அத்தொகுதியிடம் காலியாகும் பொழுது யாரைக்கொண்டு அவ்விடத்தை நிரப்புவார்கள். மேலும், வெற்றி பெற்ற கட்சிக்கே அடுத்த உறுப்பினரைத் தெரிவு செய்து அனுப்பும் உரிமை கொடுத்தால் என்ன ஆகும்? வெற்றி பெற்று உறுப்பினராக உள்ளவரின் உயிருக்கு உலைவைக்கலாம். மக்கள்…