புரட்சியாளர்கள்- பேராசிரியர் சி.இலக்குவனார்
உலகில் அறியாமை மிகுந்து மூடக் கொள்கைகள் நிறைந்து அடிமை வாழ்வில் அல்லலுற்று உரிமையிழந்து உண்பதும் உறங்குவதுமே பெரிதெனக்கருதி வாழ்வின் உண்மைக் குறிக்கோளை மறந்து மானமிழந்து மக்கள் வாழுங்காலங்களில் எல்லாம் புரட்சியாளர்கள் தோன்றுகின்றார்கள். புரட்சியாளர்களால்தான் உலகம் செம்மை நிலையை நாடிச் செல்கின்றது. புரட்சியாளர் பட்டுண்டுலகம், அஃதின்றேல் மண்புக்கு மாய்வதுமன்’ என்று தான் கூறல் வேண்டும். சாக்ரிடீசு, இயேசு, மார்க்சு, உரூசோ, மகம்மது போன்ற வெளிநாட்டுப் புரட்சியாளர்களும், புத்தர், திருவள்ளுவர், கபிலர், சாந்தி போன்ற நம் நாட்டுப் புரட்சியாளர்களும் தோன்றியிராவிடின் மக்கள் நிலை மாக்கள் நிலையில்தான்…