திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார் மனைவியை வாழ்க்கைத்துணை என முதல்முதலாக அழைத்தவரும் அவரே! கணவனும் மனைவியும் நண்பர்போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே.ஒருமை மகளிரேபோல் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பதை நோக்குக. இல்லவள் மாண்பானால் இல்லது என் என்று எல்லாம் மனைவியால்தான் என மகளிரை உயர்த்திக்கூறினார். – பேராசிரியர் சி.இலக்குவனார், திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர் : குறளமுதம் பக்கம் 524