இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நாச்சியப்பன்
(இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – தொடர்ச்சி) இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. செல்லப் பாட்டி வெங்கட்டருடைய சிற்றன்னை கணவனை இழந்தவர். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே, இராமசாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவளர்த்து வந்தார். சிறிய பாட்டியின் செல்லம் இராமசாமியை ஒரு முரடன் ஆக்கி விட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும். சுண்டற்குழம்பும்தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ‘ஓசி‘ வாங்கியும்,…
தமிழக வரலாறு 5/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 4/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு 5/5 மனிதனது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் – இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் சமயக் கதைகள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றையும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வணிகம் நடத்தலாயினர். இக்கதைகளையும் நம்பிக்கைகளையும்பற்றி விரிவான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில அறிவும் எதனையும் எண்ணிப்பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின்மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை…
சங்க இலக்கியங்கள் இயற்கை இன்பம் தருவன! புராணங்களோ பொருந்தாப் பொய்கள் நிறைந்தன! – அண்ணா
சங்க நூல்களிலோ யானை அலறக் கேட்டு அஞ்சிய தலைமகளை, அஞ்சற்க என்று கூறி ஆதரித்த தலைமனைக் காண்கிறோம். பிறகோ, அண்ணலை யானைøயாக்கி அனுப்பி வள்ளியைப் பயமுறுத்தி மணம் புரியும் வேலன் கதை வீடுதோறும் காண்கிறோம். சங்க நூல் சித்திரம் சிலருக்கே தெரியும். புராணமோ, தெரியாதவர் மிகமிகச் சிலரே. சங்க நூல்களிலே, மந்திக்குக் கனிபறித்தீயும், காதற்கடுவனைப் பற்றிய சித்திரம் காண்கிறோம். பிறகோ, சஞ்சீவி பர்வதத்தைப் பெயர்ந்தெடுக்கும் சர்வ பண்டிதனாரம் அனுமனைக் காண்கிறோம். உண்மை உவமையை உரைத்த உயர்நூலை அறிந்தோர் சொற்பம்; புராணக் கதையைப் போற்றிடுவோரே…