திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 019. புறம் கூறாமை
(அதிகாரம் 018. வெஃகாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 019. புறம் கூறாமை ஒருவர் இல்லாத பொழுது அவரைப் பற்றிக் கோள்கூறாமை. 181. அறம்கூறான், அல்ல செயினும், ஒருவன், புறம்கூறான் என்றல் இனிது. அறத்தைக் கூறாது, தீமைகளைச் செய்யினும், கோள்கூறாமை இனிது. 182. அறன்அழீஇ, அல்லவை செய்தலின் தீதே, புறன்அழீஇப், பொய்த்து நகை. பின்னே பழிப்பும், முன்னே பொய்ச்சிரிப்பும், அறஅழிப்பினும் தீது. 183. புறம்கூறிப், பொய்த்(து)உயிர் வாழ்தலின், சாதல், அறம்கூறும் ஆக்கம் தரும். பழிசொல்லும் பொய்வாழ்வைவிட, இறத்தல்,…