“சிரியா” குழந்தையும் முள்ளிவாய்க்காலும் கடற்கரையோரம் ஒதுங்கிய பாலகனின் உடலைப் பார்த்து நெஞ்சு கனக்கிறது. காவுகொண்ட கடலே காலனோடு கருத்து வேறுபட்டிருக்கக் கூடும் இந்தப் பாலகனின் உயிரைப் பறிப்பதா என்று .குழந்தையோடு குடும்பத்தையிழந்த தந்தையின் வலியையும் வேதனையையும் எங்களால் ஆழமாகவே உணரமுடியும். இறைவன் வரம் கொடுத்தாலும் இதயங்கள் தாங்காது அந்த வலிலையை. அப்பனுக்கு ஆறுதல் சொல்ல யாருளரோ நாமறியோம் – ஆயினும் வல்லமை கொடுவென்று மன்றாடுவோம். சின்னக் குழந்தையின் வாழ்ந்த காலச் சிரிப்பு – இனி நினைவில் வரும் போது தந்தை எப்படி வாடிப் போவார்…