ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 34: புலவரும் ஊர்ப்பெயரும்
( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33 தொடர்ச்சி) புலவரும் ஊர்ப்பெயரும் புலவரும் ஊர்ப்பெயரும் சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களில் பல புலவர்கள் இயற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அன்னவருள் ஊர்ப் பெயராற் குறிக்கப் பெற்றவர் சிலர். ஊர்ப் பெயரோடு தொடர்ந்த இயற் பெயர்களாற் குறிக்கப் பெற்றவர் சிலர். அப் பெயர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த இடம் பெறுவனவாகும். பொதும்பிற் புலவர் பொதும்பில் கிழார் என்பது ஒரு பழம் புலவர் பெயர். அவரும், அவர் மைந்தராகிய…