பிரிந்து மறைந்தது முறையா ஐயா? —மறைமலை இலக்குவனார்
புலவரேறு பெ.அ.இளஞ்செழியன் [வைகாசி 28, 1969 / 10.06.1938 – ஐப்பசி 14,2052 / 31.10.2021] பிரிந்து மறைந்தது முறையா ஐயா? அன்பே உருவாய் ஆட்கொண் டீரே பண்பின் வடிவாய் எமைக் கவர்ந்தீரே நட்பின் இலக்கணம் கற்பித்தீரே பிரிய இயலாப் பரிவின் உருவே பிரிந்து சென்றிட எப்படி ஒப்பினீர்? காலம் முழுமையும் கட்சிக்கு உழைத்தீர்! காலணாப் பயனும் கருதா மனத்தீர்! திராவிட இயக்கப் பாவலர் அணியில் முன்னணி வரிசை முதல்வர் நீவிர்! அண்ணா கலைஞர் பேராசிரியர் எந்நாளும் நீர் போற்றிடும் நாவலர் அனைவரும் …
மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன் – இலக்குவனார் திருவள்ளுவன்
மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது தால்மியாபுரம் பெயர் மாற்ற எதிர்ப்பான கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் அமர்ந்தவர்; கோடை விடுமுறைகளில் கலைஞர் கருணாநிதியின் நச்சுக் கோப்பை, தூக்கு மேடை போன்ற சீர்திருத்த நாடகங்களை இயக்கியும், கதைத்தலைவன் வேடங்களில் நடித்தும், விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டவர்; பள்ளி இறுதி வகுப்பு பயிலும் பொழுது தேவிகுளம், பீர்மேடு கேரளத்தோடு இணைக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்தத்தில் பள்ளி மாணாக்கர்களையும் பங்கேற்கச் செய்தவர்; மாணவப் பருவத்திலேயே தமிழ்க்காப்புப் பாதையில் நடைபோட்ட அவர்தாம் புலவர்…