புலவர்கள் 3. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 32 16. புலவர்கள் (தொடர்ச்சி) அக்காலத் தமிழ்மக்கள் இயலிசை நாடகங்களிலும், நடனங்களிலும் இன்பங் கண்டனர். அக்கால நடனம் எவ்வாறு நடந்தது என்பதை இயற்கைக் காட்சியில் இன்புறக் காட்டுகின்றார். இங்கு நடனப் பெண்ணாக மயில் தோன்றுகிறது. பார்த்து மகிழும் அவையினராக மந்திகள் அமருகின்றன. குழலிசையை இயற்கையில் துளைபட்ட மூங்கிலில் கோடைக்காற்று சென்று எழுப்புகின்றது. முழவாக அயலில் ஓடும் அருவியின் இன்னிசை இயம்புகின்றது. தூம்பு…
புலவர்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 30 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 16. புலவர்கள் (தொடர்ச்சி) தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆய மூவரும் தனிச்சிறப்புடையவர்கள். தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பே தமிழ் வளர்ப்பதற்கெனச் சங்கம் தோன்றியிருக்க வேண்டும். ஆதலின், சங்கக் காலத்துக்கு முற்பட்டவராவார் தொல்காப்பியர். தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு எனவும், திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், இளங்கோ அடிகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கொண்டுள்ளோம். சங்கக்காலத்தைக் கி.மு….
புலவர்கள் 1. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 29 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 30 16. புலவர்கள் புலவர்களே நமது மொழியின், பண்பாட்டின், நாகரிகத்தின் புரவலர்கள் ஆவார்கள். புலவர் எனும் தமிழ்ச் சொல் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும். வெறும் மொழிப் புலமை மட்டும் உடையோர் புலவர் ஆகார். மொழிப் புலமையுடன் பண்புநலன் சான்று, ஏதேனும் ஒரு துறையில் வல்லுநராகவும், பிறர்க்கென வாழும் பெற்றியராகவும் இருப்போரே புலவர் எனும் பெயர்க்கு உரியவராவார். சங்ககாலப் புலவர்கள் அனைவரும் இவ்…
அறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 13/ 69 இன் தொடர்ச்சி)
புலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள் – பேரா.சி.இலக்குவனார்
புலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள் புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள் ; மக்களை நல்வழிப்படுத்தும் விதிகள் பல அமைக்கும் சட்ட மன்றம் போன்றவர்கள். அரசரேயாயினும் யாவரே யாயினும் நெறிதவறிச் சென்றால் அதனை எடுத்துக்காட்டி நேர்வழி நடக்க அறிவுரை கூறுவார்கள். இக்காலத்து மக்களாட்சி அரசு மக்களுக்குச் கேடு பயக்கும் நெறி முறைகளை மேற்கொள்ளத் தொடங்கினால் எதிர்க் கட்சிகள் எதிர்த்து நின்று அரசின் குற்றங்களை எடுத்து இயம்புகின்றன. அக்காலத்தில் கட்சி முறையில் ஆட்சி இல்லை. ஆகவே புலவர்களே அப்பணியையும் ஆற்றிவந்தனர். -பேரா.முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய…
அரசுப்பணிக்குத் தமிழ்ப்புலவர்கள்
தமிழ்நாட்டு அரசு அலுவல்களில் தமிழ்ப் புலவரும் பணிபுரியலாம் எனும் செய்தி வெளிவந்துளளது. இச்செய்தி வெளிநாட்டார்க்கு நகைப்பை விளைவிக்கும். ஆங்கில நாட்டில் ஆங்கிலத்தில் புலமையுற்றோரும், ஏனைய நாடுகளிலும் அவ்வந்நாட்டு மொழிகளிலும் புலமைபெற்றோரே அலுவல் துறைகளில் முதன்மையிடம் பெறுகின்றனர். தமிழ்நாட்டிலும், தமிழ் ஆட்சிமொழியானபிறகு தமிழ்ப்புலமை பெற்றோரே தமிழ்நாட்டு அரசு அலுவல் துறைகளில் அமர்த்தப்படல் வேண்டும். ஆனால் இன்னும் தமிழ்ப்புலமைப் பட்டம் பெற்றோர்க்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை தமிழ்ப் புலமையுற்றோர் பணிதேடிச் செல்லுங்கால் ஆங்கிலப் புலமை பெற்றிருந்தம், அதனுடன் தமிழ்ப்புலமை பெற்றிருப்பதால் அதற்காக இகழப்படுகின்றனராம். என்னே…