திருநகர் நூலகத்திற்குப் புலவர்மணி இளங்குமரனார் பெயர் சூட்டுக!
திருநகர் நூலகத்திற்குப் புலவர்மணி இளங்குமரனார் பெயர் சூட்டுக! அரசிற்கு வேண்டுகோள்! முதுபெரும் தமிழறிஞர் புலவர்மணி இரா.இளங்குமரனார் உடல் அரச வணக்கத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, புலவர்மணி மாணாக்கர் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாணாக்கர் சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி முதலானோர் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து பங்கேற்றனர். அறிஞரை மதிக்கும் முதல்வர் மு.க.தாலினுக்கும் அரசிற்கும் பாராட்டுகள். மறைந்த அறிஞர் நினைவாக அவர்வாழ்ந்த மதுரைையைச் சேர்ந்த திருநகரில் உள்ள கிளை நூலகத்திற்குப் புலவர்மணி இளங்குமரனார் நூலகம் என அவர் பெயரைச் சூட்டுமாறு தமிழ்க்காப்புக்கழகத்தின் தலைவரும்…