இனிதே இலக்கியம் – 10: முதல் நாவை யசைத்த மொழி – அ.வரத நஞ்சையப்பர்
10 தமிழன்னையை வாழ்த்துவோம்! நண்ணுமிளமைப் பருவத்தி லேமுதல் நாவை யசைத்த மொழி- எங்கள் கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக் கருத்தோ டிசைந்த மொழி- எந்தம் எண்ணத்தைக் கூறற்கு நானென்று முன்வந் திருந்து திருந்து மொழி- வேற்று வண்ணப் பிறமொழி கற்க வுதவிய வண்மைபொ ருந்தும் மொழி- அதனால் எங்கள் தமிழன்னை வாழிய வாழிய வென்றடி வாழ்த்துவமே! தாராமங்கலம் புலவர் அ. வரதநஞ்சைய(பிள்ளை) அவர்கள் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ நூலில் வரும் தமிழ் வாழ்த்துப் பாடல். “மழலைப்பருவத்தில் முதல் முதலில் நாவை அசைத்துப் பிறந்த…