கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்! – தங்க. சங்கரபாண்டியன்
கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்! ‘கல்விப் பெருவள்ளல்’, ‘புதுக்கோட்டை அண்ணல்’ என்றெல்லாம் புகழப்படும் பு.அ. சுப்பிரமணியனார், ஐயாக்கண்ணு – மாணிக்கத்தம்மாள் இணையருக்கு ஐப்பசி 07, 1929 – 22.10.1898-ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையார் மறைவினால் கல்லூரியில் படித்து வந்த அண்ணலாரின் படிப்பு பாதியில் தடைபட்டது. அதனால் இவர் கல்விச் செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கிலும், கல்விச் செல்வம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் பேரவாவிலும், 1924-ஆம் ஆண்டு ‘கல்வி வளர்ச்சிக் கழகம்‘ ஒன்றைத் தொடங்கினார். …