இன்பத் தமிழினிற் பாடு! – புலவர் பொதிகைச்செல்வன்
யாழெடு யாழெடு கண்ணே! – யாழில் இங்கே இசைத்திடோர் பண்ணே! ஊழிடு துன்பம் பறக்க – நெஞ்சில் ஓங்கியே இன்பம் சிறக்க – (யாழெடு) வேயின் குழலிசை யோடு – இள வேனிற் குயிலெனப் பாடு! நோயின் துயரெலாம் ஓட – உயர் நோக்கமும் ஆக்கமும் கூட – (யாழெடு) இன்பத் தமிழினிற் பாடு! – இனம் ஏற்ற முறத்தினம் நாடு! அன்னைத் தமிழ்த்திரு நாடு – நலம் ஆர்ந்திடவே வழி தேடு! – (யாழெடு) நற்றமிழ் கற்றுநீ தேய்வாய்! – பாரில் நம்மினத்…