சமுதாயம் அன்றும் இன்றும் – தி. வே. விசயலட்சுமி
சமுதாயம் அன்றும் இன்றும் மக்களினம் அறிவு வளர்ச்சி பெற்று நாகரிகம் மிகுந்து வளர வளர சமுதாய உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயக் கொள்கைகளுக்கும் இன்றையக் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தால் உண்மை புலனாகும். ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே -என்று பாடினார் புலவர் பொன்முடியார். அரசனுக்காகப் போர்புரிந்து வெற்றி பெற்றுத் தருதலே அக்கடமையாக இருந்தது. இன்றோ, போர் முயற்சியில் ஈடுபடாமல் உலக அமைதியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதே இளைஞர்க்குக் கடமையாக…