ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1301-1310)-இலக்குவனார் திருவள்ளுவன்
[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1291-1300) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 131. புலவி 221. ஊடலில் தழுவாமல் சிறு துன்பம் தருவோம். (1301) 222. உணவில் உப்புபோல் இன்பத்தில் ஊடல் அளவாய்க் கொள்க. (1302) 223. ஊடலுற்றவரைத் தழுவாமை, துன்புற்றவர்க்குத் துன்பம் தருதலாகும்.(1303) 224. ஊடியவரைக் கூடாமை, வாடியகொடியை அடியோடு அறுத்தலை ஒக்கும்.(1304) 225. நல்லவர்க்கு ஊடலும் அழகே!(1305) 226. பூசலின்மை கனியின் இனிமை. ஊடலின்மை காயின் துவர்ப்பு.(1306) 227. கூடல் நீளாதோ என எண்ணும் துன்பம் ஊடலில் உண்டு.(1307)…