(அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்               02. துறவற இயல்                 அதிகாரம் 026. புலால் மறுத்தல்   அசைவம் உண்ணாமையும், பிறஉயிர்க் கொலையை எண்ணாமையும் அருள்.   தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறி(து) ஊன்உண்பான்,      எங்ஙனம் ஆளும் அருள்….?   உடலைப் பெருக்க, உடலுண்பான்        எங்ஙனம் அருளை ஆள்வான்….?   பொருள்ஆட்சி, போற்றாதார்க்(கு) இல்லை; அருள்ஆட்சி,        ஆங்(கு)இல்லை ஊன்தின் பவர்க்கு.   காப்பாற்றாதார்க்குப், பொருளும், புலாலைத்        தின்பார்க்கு, அருளும் இல்லை.   படைகொண்டார்…