புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க‌ உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற‌ நாணல் கீற்றும் பச்சைத்தீயாய் நாடியெல்லாம் பற்றி எரிக்குதே. பொருள் வயின் செல்கிறேன் என‌ கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு குருகு கூட பறைச்சிறகை படபடத்து துடி துடித்துக்காட்டுதையா. உள்ளே நில நடுக்கம் தவிடு பொடி ஆக்கியதில் நான் எங்கே? என் உடல் எங்கே? என் உறுப்புகளும் கழன்றனவே! இதழ் குவிக்கும் ஒரு பக்கம் சொல் அங்கே இறந்துவிழ. சிறுபயல் பிய்த்திட்ட‌ பாவை நான்…