தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 4: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப்.06, 2015 தொடர்ச்சி) 4 ‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன’ என்னும் தொடர் மக்கள் இடையே உலவினாலும் அதன் பொருள் யாருக்கும் புரிவதில்லை. உண்மையில் இவ்வரிகள் வால்மீகியால் இராமாயணத்தில் சொல்லப்பட்டதாகும். இராவணனின் எதிர்ப்பைச் சமாளிக்க இயலாமல் பின்வாங்கி ஓடும் வானரப் படையினர், தமக்குரியதல்லாத அயல்நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன? நாம் ஏன் அயலவர் நாட்டுப் போரில் மாள வேண்டும் என்று நொந்து கூறியதாகும். இதனை, யார் ஆண்டால்…