(5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 6.  பு தி ய  ஆ ட் சி த் த மி ழ் ச்  ச ட் ட ம்  தே வை! தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பது கட்சி, சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாராலும் பலமுறை வற்புறுத்தப்பட்டு வந்தது. தமிழறிஞர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், அரசியலாளர்கள் எனப் பலரும் கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றியும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினர். இவற்றின் பயனாக, ஆட்சிமொழிச்சட்டம் 1956இல்…