இலக்குவனார் புகழ் இனிதே வாழ்க!   இலக்கியம் கூறும் இயல்புடை வாழ்வைப் பலப்பலக் கூறாய்ப் பகுத்துக் காட்டிச் சங்கத் தமிழைச் சாறாய்ப் பிழிந்த சிங்க மறவர்; சிறந்தநல் மொழியர் இலக்குவன் என்னும் பண்புடைப் பெரியர் கலக்கமில் நெஞ்சர் கண்ணிமை துஞ்சா உழைப்பில் நாளும் உயர்ந்த நிலையால் அழைத்தது காலம் அவர்நூற் றாண்டைப் போற்றி மகிழப் புதுப்பொலி வானது ஆற்றிய பணிக்கே அகமுக நெகிழ நன்றி யென்பதை நாடி யவர்க்கே இன்று சொல்லியே இறும்பூ தெய்தது. கற்றோ ரெல்லாம் களிப்புறு வாழ்த்தால் பொற்றா மரையெனப் போற்றினர்…