கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 76 : தமிழிசை தழைக்கும்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 75 – தொடர்ச்சி) பூங்கொடி 15. இசைத்திறம் உணர எழுந்த காதை- தொடர்ச்சி தமிழிசை தழைக்கும்           ஆதலின் அன்னாய்! அத்துறை அனைத்தும்              ஏதிலர் தமக்கே இரையா காமல்,   80           தாய்மொழி மானம் தமதென நினையும் ஆய்முறை தெரிந்த ஆன்றோர் தாமும் உயிரெனத் தமிழை உன்னுவோர் தாமும் செயிரறத் தமிழைத் தெளிந்தோர் தாமும்                 புகுந்து தமிழிசை போற்றுதல் வேண்டும்;        85           தகுந்தோர் புகின்அது தழைத்திடல் ஒருதலை;          கூத்தும் பரவுக           கூத்தும் அவ்வணம்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 : 15. இசைத்திறம் உணர எழுந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி-தொடர்ச்சி) பூங்கொடி இசைத்திறம் உணர எழுந்த காதை அடிகளார் ஆணை பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள் `மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால் ஆன நல்லிசை யாண்டும் பரவிடச்                   சுவடியின் துணையால் தொண்டியற் றென்று 5           தவறிலா அடிகள் சாற்றினர்’ என்றனள்; அருண்மொழியும் இசைதல்           `ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும் தோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி மீண்டும் அப்பணி மேவுதல் வேண்டும்;           பூண்டநல்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 71 : ஏமகானன் பாராட்டுரை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 70 : மீனவன் சங்கம் புகுதல்-தொடர்ச்சி) பூங்கொடி ஏமகானன் பாராட்டுரை திசைதொறும் சென்று தன்புகழ் நிறீஇ விருதுபல கொண்டு வெற்றிக் களிப்பொடு வருவோன் ஒருவன் வடபுலத் திசைவலான்              ஏம கானன் எனும்பெயர் பூண்டோன்      105           தோமறு மீனவன் தொண்டும், தமிழிசைப் புலமையும், அவன்பெரும் புகழும் செவிமடுத்துக் கலைமலி காளையின் கண்முன் தோன்றி `உரவோய்!  இளமையில் ஒருதனி நின்றே                  இரவாப் பகலாத் திறமுடன் ஆற்றும்       110           நின்னிசைப் பணிக்கு நெடிதுவந் தனனே, என்னிசைப்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 70 : மீனவன் சங்கம் புகுதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்-தொடர்ச்சி) பூங்கொடி மீனவன் சங்கம் புகுதல் ஏதிலர் நம்மை இகழ்ந்துரை யாடநோதகச் சிலபல தீதுற் றழிந்தன;அந்தோ உலக அரங்குக் கொளிசெயுமநந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்! 60மண்ணக முதல்வி! எண்ணுநர் தலைவி!நண்ணுவ தேனோ நலிவுகள் நினக்கெனக்கண்கலங்கி நெஞ்சம் புண்ணடைந் திருப்ப,ஆங்கோர் பெருமகன் அவனுழை வந்துபாங்குடன் அவனுளப் பாடுணர்த் துரைக்கும்; 65`அயரேல் மீனவ! அறைகுவென் கேள்நீ!பயில்தரு மறவர் பாண்டிய மரபினர்சங்கம் நிறுவித் தண்டமிழ்ச் சுவடிகள்எங்கெங் குளவோ அங்கெலாம் துருவிததொகுத்து வைத்துளார்; மிகுந்தஅச் சுவடிகள்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை-தொடர்ச்சி) பூங்கொடி சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும் இத்தகு பகைஎலாம் எதிர்த்துத் தப்பின            பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்,அச்         25           சங்கப் புதையலும் சாமி நாதத் துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம்; சிற்றூர் யாங்கணுஞ் சென்றுசென் றோடிப் பெற்றஅவ் வேடுகள் பெருமை நல்கின;           இத்தொகை நூல்களும் புத்தக உருவில் 30           வாரா திருப்பின் வளமிலா மொழிஎன நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர்; நல்லோன்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 67 : கயவர் தாக்குதல்-தொடர்ச்சி) பூங்கொடி, கூடலில் மீனவன் பணி ஆங்கவன் றனக்குப் பூங்கொடி நல்லாய்!தீங்கொன் றுற்றது செப்புவென் கேண்மோ!கேட்குநர் உள்ளம் கிளர்ந்தெழும் பாடல்,நோக்குநர் மயக்கும் நுண்கலை ஓவியம்,கள்ளின் சுவைதரு காவியம் முதலன 5வள்ளலின் வழங்கினன் வருவோர்க் கெல்லாம்;அவ்வவர் திறனும் அறிவும் விழைவும்செவ்விதின் ஆய்ந்துணர்ந் தவ்வவர்க் குரியனபயிற்றினன், பயில்வோர் பல்கினர் நாடொறும்;மாணவன் ஐயம் செயல்திறம் நற்பயன் செய்துவரு காலை 10`இசையும் கூத்தும் இயம்பும் தமிழ்நூல்நசையுறும் ஓவியம் நவில்நூல் உளவோ?ஒருநூ லாயினும் உருவொடு காண்கிலேம்;எனஓர் ஐயம் எழுப்பினன் ஒருவன்;தமிழின் பகைகள்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 66 : சாதி ஏது?

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்-தொடர்ச்சி) பூங்கொடி சாதி ஏது?           சாதி என்றொரு சொல்லினைச் சாற்றினீர் ஆதியில் நம்மிடம் அச்சொல் இருந்ததோ?                 பாதியில் புகுந்தது பாழ்படும் அதுதான்;          155           தொழிலாற் பெறுபெயர் இழிவாய் முடிந்தது; அழியும் நாள்தான் அணிமையில் உள்ளது; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் றோதிய திருக்குறள் உண்மைநும் செவிப்புக விலையோ?               கதிரும் நிலவும் காற்றும் மழையும்         160           எதிரும் உமக்கும் எமக்கும் ஒன்றே! தவிர்த்தெமை நும்பாற் சாருதல் உண்டோ? கபிலர் அகவல்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 64 : கலை பயில் தெளிவு-தொடர்ச்சி) பூங்கொடி மீனவனைப் பழித்தல்           என்றனன்; அவ்விடை இருந்தவர் ஒருவர் `நன்று நன்றடா! மரபினை நவிலக்                    கூசினை யல்லை! குலவுநின் மரபோ     125           ஏசலுக் குரியது! வேசியின் பிள்ளை! சாதி கெடுத்தவள் தந்தைசொல் விடுத்தவள் வீதியில் நின்றவள் விடுமகன் நீயோ எம்பெரு மரபை இகழ்ந்துரை கூறினை?                    வம்பினை விலைக்கு வாங்கினை சிறியோய்!’         130           என்றிவை கூறி ஏளனம் செய்தனர்;         மீனவன் வெஞ்சினம்           `பெரியீர்! ஏளனப்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 64 : கலை பயில் தெளிவு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு – தொடர்ச்சி) பூங்கொடி கலை பயில் தெளிவு           நன்மக விதனை நயந்து வாங்கியோன் தன்மனை யாளும் தாம்பெறு பேறெனக் கண்ணென மணியெனக் காத்து வளர்த்தனர்;                    எண்ணும் எழுத்தும் எழிலோ வியமும்    105           பண்ணும் பிறவும் பழுதிலா துணர்ந்தே செவ்விய நடையினன் செந்தமிழ் வல்லுநன் அவ்வூர் மக்கள் அறிஞன்என் றியம்ப,               கோவிலில் மீனவன்            வாழ்வோன் ஒருநாள் வானுயர் கோவில்                   சூழ்வோன் உட்புகச் சொற்றமிழ் கேட்டிலன்   110…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 62 : பொன்னியின் செயலறு நிலை- தொடர்ச்சி) பூங்கொடி உடன் போக்கு           என்னலும், மின்னலின் இடையினள் துவண்டு கன்னலின் மொழியாற் `கருத்துரை வெளிப்பட உரை’எனத், தலைவன் `உடன்போக்’ கென்றனன்;              `விரைவாய்! விரைவாய்! விடுதலை பெறுவோம்;     80           மீன்,புனல் வாழ வெறுப்பதும் உண்டோ? ஏன்உனக் கையம்? எழுவாய் தலைவா! நின்தாள் நிழலே என்பே ரின்பம்’ என்றவள் செப்ப, இருவரும் அவ்வயின்            ஒன்றிய உணர்வால் உடன்போக் கெழுந்தனர்;         85 தந்தையின் மானவுணர்வு           துன்றிருட் கணமெலாம்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 62 : பொன்னியின் செயலறு நிலை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 61 : தந்தையின் சீற்றம்- தொடர்ச்சி) பூங்கொடி பொன்னியின் செயலறு நிலை           இந்நினை வதனால் ஏங்கி மெலிவது                கண்டனன் தந்தை; கடிதினில் இவள்மணம்    50           கண்டமை வேன்எனக் கொண்டுளங் கருதி முயல்வுழி, இச்செயல் முழுவதும் உணர்ந்த கயல்விழி இரங்கிக் கண்ணீர் மல்கிச் செயலறக் கிடந்தனள் மயலது மிகவே;  பொன்னி காதலனிடம் செய்தி கூறல்           இனைந்துயிர் மாய இடங்கொடா ளாகி 55           நினைந்தொரு முடிவு நேர்ந்தனள் மனத்தே; விடிந்தால் திருநாள் விரைவினில் அனைத்தும்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 61 :  தந்தையின் சீற்றம்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 60 : இசைப்பணிக்கு எழுக எனல்-தொடர்ச்சி) பூங்கொடி தந்தையின் சீற்றம்           மறைபிறர் அறிய மலர்ந்தஅவ் வலர்மொழி குறையிலாக் களமர் குலமகன் செவிபுகத் தணியாச் சினமொடு தன்மகட் கூஉய்த் `துணியாச் செயல்செயத் துணிந்தனை! என்குல               அணையாப் பெருமையை அணைத்தனை பேதாய்!         30           நினைகுவை நீயிப் பழிசெய என்றே நினைந்தேன் அல்லேன் முனைந்தாய் கொடியாய்! மேதியிற் கீழென மேலோர் நினைக்கச் சாதி கெடுக்கச் சதிசெய் தனையே!                 வீதி சிரிக்க விளைத்தனை சிறுசெயல்! 35 இற்செறித்தல்          …

1 2 4