70.அன்பே சிவம் என்பது சனாதனம். – சரியா? + 71. ஞானச் சுடர் விளக்கு ஏற்றியது சனாதனம்.- சரியா? + 72. பணிவைச் சொல்லிக் கொடுத்தது சனாதனம் என்கிறாரே இரங்கராசு – சரியா?
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 67-69 தொடர்ச்சி) அன்பும் சிவனும் இரண் டென்பரறிவிலார் அன்பே சிவ மாவதற்கும் அறிகிலார் அன்பே சிவ மாவதாகும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. என்பது திருமூலர் கூற்று. அன்பு, அன்பிலிருந்து பிறக்கும் அருள் (அன்பு ஈன் குழவியாகிய அருள்) எவ்வகை வேறுபாடின்றி எல்லா உயிர்களிடத்தும் காட்ட வேண்டிய பண்பாகும். குடும்பத்திலுள்ள பெற்றோர், உடன் பிறப்புகள், வாழ்க்கைத் துணை, மக்கள், பிறர், பிற உயிர்கள் என அனைத்துத் தரப்பாரிடமும் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் காட்டப்படுதே அன்பு என்னும் நெறி. இதுவே…
தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன் – பூதத்தாழ்வார்
தமிழைப் பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்,வண்தமிழ்,ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச்சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழ்வர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார். ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ‘ஞானத்தமிழ்’ என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக்கொண்டும் பெருமையடைகிறார். தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்கவல்லது….