பூம்புகார் அவலநிலை – க.தமிழமல்லன்
பூம்புகார் அவலநிலை 1975இல் தமிழக முதல்வராக இருந்த இலக்கியப்பேராசான் கலைஞர் தம் கற்பனை வளத்தால் சிலப்பதிகாரம் என்னும் ஒப்பற்ற இலக்கியத்திற்கு உயர்வாழ்வு அளித்தார். சிலப்பதிகாரக் கதைக்காட்சிகளை நுட்பம் மிக்க சிற்பப் பலகைகளாக உருவாக்கினார். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட எழுநிலைமாடத்தைப் பூம்புகாரில் கட்டி அதில் மக்கள் பார்த்து மகிழுமாறு பதிக்கச்செய்தார். அவற்றை ஒருமுறை பார்த்தாலே சிலப்பதிகாரத்தைப் படித்த எண்ணம் நமக்குத் தோன்றும்.மிக அழகான கண்ணகி, மாதவி சிலைகளையும் அங்கு நிறுவச் செய்தார். மக்கள் அவர்களை நேரில் பார்க்கும் தோற்றத்தையே அச்சிலைகள் உண்டாக்கும். ஏறத்தாழ 34 குறுக்கம் (ஏக்கர்)…