புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணை – மேனாள் மருத்துவ இணை இயக்குநர்
புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் – மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு – வந்தவாசி. நவ.26. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டமும், வந்தவாசி சுழற் சங்கமும் இணைந்து தேசிய நூலக வாரப் பொன் விழா நடத்தின. இவ் விழாவில், பாடப்புத்தகங்கள் தாண்டிய பிற குமுக(சமூக) – அறிவியல் – வரலாறு -இலக்கியப் புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் என்று மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மரு.எசு.குமார் குறிப்பிட்டார். இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர்…