பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம் – இலக்குவனார் திருவள்ளுவன்
பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம் விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்-நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 548) தொகுத்து இனிமையாகச் சொல்பவர் கூறுவதை உலகம் விரைந்துகேட்கும் என்கிறார் தெய்வப்புலவர். இவ்வாறு இனிமையாகவும் தணிமையாகவும் சொல்லும் வல்லமை மிக்கவர் முத்துச்செல்வன் என்னும் திரு மீனாட்சி சுந்தரம். எனவேதான் அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பொழுது எண்ணியவற்றை எளிதில் நிறைவேற்றினார். சொந்தஊரான திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூர் வந்த ஆண்டு 1966. வந்தவுடன் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். உறுப்பினராகவும் தலைவர் முதலான பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். இப்பொழுதும் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து தொண்டாற்றிவருகிறார். பெங்களூரில்,…
பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்
சித்திரை 17, 2048 ஞாயிறு ஏப்பிரல் 30, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபா, சென்னை 600 018 அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் – ஆனந்தம் சேவா சங்கம் நடத்தும் இலக்கியப் பெருவிழா வைணவத் தமிழ் -தொடர்சொற்பொழிவு பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்
உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க வேண்டும்
உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க வேண்டும்! தொல்காப்பியரின் புகழ் பரவும் வகையில் உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ச.வே.சுப்பிரமணியம் பேசினார். தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்பிக்காட்டில் பிறந்தவர். அங்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் தொல்காப்பியரின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சதாசிவம் மனோன்மணிபுரம் கோயில் வளாகத்தில் இவ்விழா…