விரும்பிய இடத்தில் மாறிக் கொள்ளும் வசதி!  தனியாகப் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்வண்டியில் புதிய ஏற்பாடு!   தொடர்வண்டிப் பயணத்தின்பொழுது சுற்றிலும் ஆண் பயணிகள் இருந்தால், பெண் பயணிகள் வேறு இடத்துக்கு மாறிக் கொள்ளும் வசதியைத் தெற்கு இருப்பூர்தித்துறை (Southern Railway Department) அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தெற்கு இருப்பூர்தித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடர்வண்டிப் பயணங்களின்பொழுது சில நேரங்களில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு, சுற்றிலும் ஆண் பயணிகளே இருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெண்கள் வசதிக்குறைவாகவும், பாதுகாப்பு இன்றியும் உணர்கின்றனர்….