(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17 தொடர்ச்சி)       தனித்தமிழ்க் கிளர்ச்சி 12/17 பல்வகை இன்பம் படைத்துமே காக்கும்நற்செல்வம் தமிழர்க்குச் செந்தமிழே அம்மானைசெல்வம் தமிழர்க்குச் செந்தமிழேல் அத்தமிழ்க்கல்வி பலர்கற்காக் காரணம்என் அம்மானைஅறியாமை காரணம் இன்(று) அகன்றுவிட்ட தம்மானை       (56) அடுத்துமே பள்ளிதனில் அருங்கல்வி பெறாதோர்க்குப்படத்தினால் கல்விதனைப் பரப்பலாம் அம்மானைபடத்தினால் கல்வி பரவுமென்றாற் படத்தைநடத்துபவர் அதில்கருத்து நாட்டவேண்டும் அம்மானைநாட்டின் நம்நாட்டிற்கே நலமுண்டாம் அம்மானை       (57) ஏர்மிகு பல்வளங்கள் இயையத் தமிழர்வாழ்ஊர்தோறும் நூல்நிலையம்…