பெண்களே கண்கள்! – தி.வே. விசயலட்சுமி   அரசியல், நீதி, மருத்துவம், காவல், ஆசிரியர், விளையாட்டு என்று பல்வேறு துறைகளிலும், அறிவியல் நுட்பத்திலும் தம் தடம்பதித்து நாளுக்கு நாள் மகளிர் பெருமை வானளாவ ஓங்கி நிற்கிறது. ஆனால் பெண்ணினத்தை இழிவு செய்யும் மடமை முற்றிலும் அழிந்தபாடில்லை. இரண்டு பெண் குழந்தைகட்கு மேல் மூன்றாவது பெண்ணாகப் பிறந்து விட்டால் அதை நஞ்சூட்டிக் கொன்று விடும் நச்சுமனிதர்களை நாளும் ஊடகங்கள் இதழ்கள் வாயிலாக அறிந்து மனம்பதைக்கிறோம். தமிழக அரசு, தொட்டில் குழந்தைத் திட்டம் போன்ற பல சீரிய…