அகத் துறைகளில் தலைமையதிகாரமுடையார் பெண்டிர் – நாவலர் பாரதியார்
மனைமாண்பு சிறக்குமாறு அகத் துறைகளில் தலைமையதிகாரமுடையார் பெண்டிர் என்பதும், “மனைவி”, “இல்லாள்”, என்னுந் தொல்லைத் தமிழ் மொழிகளுக்கும் நேரான ஆண்பால் வழக்கின்மையொன்றே விளக்கும் மனைமாட்சிக் குரியாள் – இல்லத் துறைகளிலிறைமைக் குரியாள் என்னும் பொருள்பட, “மனைவி”, “இல்லாள்”, என வழங்குத் தமிழ்ச் சொற்களுக்குச் சரியாய், “மனைவன்”, “இல்லான்” என வழக்குமுறை கிடையாது; இப் பொருளி லாண்பாலொரு சொல் வழக்கின்மை நோக்கின் அவ்வுரிமை மகளிர்க்கே சிறப்பாதலும் ஆடவர்க்கதிலொப்புரிமை கூட இன்மையுமே தமிழர் முது வழக்காதலானிவ்வாறு சொற்களமைந்துள்ளன வென்பதன்றிப் பிறிது காரணங் காண்பதரிது. –நாவலர் சோமசுந்தரபாரதியார்:…