திருவள்ளுவப் பெயர்க்காரணம்: திருவள்ளுவர் என்று இவர் பெயர். பிறந்த குலம்பற்றி இவர்க்கு வழங்குவதென்று கூறுவர். வள்ளுவர் என்ற குடியினர் தாழ்குலத்த¬வ¬ருள் ஒருவராய், விசேட காலங்களிலே அரசாணையை முரசறைந்து சாற்றுவோர் என்பது முன்னூல்களால் அறியப்படுகின்றது. சோதிட நூல்வல்ல நிமித்தகராகவும் பண்டைக்காலத்தே இவர் விளங்கினர் (சீவக.419). சங்கக் காலத்தே தமிழ் நாட்டவருள் சாதிபற்றிய இழிவும் அதன் மூலம் அருவருப்பும் இப்போதுள்ளனபோல இருந்தனவல்ல. தமிழ் வேந்தர்களும் தலைவர்களும் பாணர் முதலிய தாழ்குலத்தவர்களை அவரது கல்வியறிவு முதலியன பற்றி எவ்வளவு சிறப்பாகக் கௌரவித்து வந்தனரென்பதற்குச் சங்கச் செய்யுட்களே தக்க சான்றாக…