திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 045. பெரியாரைத் துணைக்கோடல்
(அதிகாரம் 044. குற்றம் கடிதல் தொடர்ச்சி) 02. அறத்துப் பால் 05. அரசு இயல் அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் அனைத்து நிலைகளிலும், தகுதிமிகு பெரியாரைத் துணையாகக் கொள்ளல். அறன்அறிந்து, மூத்த அறி(வு)உடையார் கேண்மை, திறன்அறிந்து, தேர்ந்து கொளல். அறம்அறிந்த, மூத்த அறிவாளர் பெருநட்பைத் தேர்ந்து கொள்க. உற்றநோய் நீக்கி, உறாஅமை முன்காக்கும், பெற்றியார்ப் பேணிக் கொளல். வந்த துயர்நீக்கி, வரும்முன்னர்க் காக்கும் பெரியாரைத் துணைக்கொள். அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப் …